ஆடிமாதம் பற்றிய சிறப்புக் கதைகள்:
1. ஸ்ரீ உமாதேவியார் ஸ்ரீ சிவபெருமானைத் தம் கணவராக அடைய விரும்பி, ஆடியில், அக்னியில் நின்று தபஸ் செய்து, ஸ்ரீ சிவனைத் திருமணம் செய்து கொண்டாராம். எனவே கன்னிப்பெண்கள் ஆடி வெள்ளிகளில் கோவில்களில் ஸ்ரீ அம்பாளை வழிபட்டு வணங்கினால், நல்ல கணவரை அடைவார்கள் என்பது ஐதீகம்.
2. ஸ்ரீவில்லிபுத்தூரில், பெரியாழ்வார் இல்லத்து நந்தவனத்தில், துளசிச் செடியின் அடியில்,பூமி நாச்சியாராக, ஸ்ரீ ஆண்டாள், குழந்தையாக அவதரித்து, ஸ்ரீவிஷ்ணு சித்தரின் வளர்ப்புப் பெண்ணாக "கோதை" வளர்ந்து, ஆடி வெள்ளியில் தன் தவத்தை மேற்கொண்டு, மார்கழியில் "பாவை நோன்பு" நூற்று, திருப்பாவை இயற்றி, ஸ்ரீ அரங்கருக்கு "சூடிக்கொடுத்த சுடர் கொடியாக" விளங்கி ஸ்ரீ அரங்கநாதரையே திருமணமும் செய்து கொண்டாள்.
3. ஆடிப்பூரத்தன்று கோவில்களில், ஸ்ரீ அம்பாள் கர்ப்பிணிப் பெண்ணாய் இருப்பதால் திருக்கரங்களில் வளையல்களை அணிவித்து, வளைகாப்பு நடத்தி, அதி சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆடிப்பூரத்தன்று திருவண்ணாமலையில் ஸ்ரீ அபித குசலாம்பாளுக்கு, அக்கோவில் பிரகாரத்திலேயே தீமூட்டி, தீமிதி நடக்கின்றது.
இந்தியாவில் தென் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள இல்லத்தரசிகளால் ஆடி 18 ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம் மாதத்தில் காவிரி அம்மன் கர்ப்பிணிப் பெண்ணாய் இருப்பதால் ஆடி 18 அன்று புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என்று கலந்த சாதமும், அப்பளம், வடாம், வடை முதலியன, வீட்டிலிருந்து தயாரித்துக்கொண்டுபோய், காவிரி அம்மனுக்கு நைவேத்தியம் செய்து, கரையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடுவதென்பது ஐதீகம்.
கும்பகோணம் மாமாங்கம் குளத்தில் ஆடி18 அன்று, காவிரித்தாய் பொங்கி 18 படிகளையும் கடந்துவந்து இந்த நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்வது ஒரு தெய்வீகச்செயலாகும்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானத்திலுள்ள புஷ்கரணியில் அமாவாசைகளில் குறிப்பாக ஆடி மற்றும் தை மாதத்தில் வெல்லத்தை கரைப்பது வழக்கம். வெல்லம் நீரில் கரைவது போல் ஒவ்வொருவரது நோயும் கரைந்து மறைவதாக ஐதீகம்.
லிப்கோவின் வெளியீடுகளில் ஸ்ரீ அம்பாள் பற்றிய முக்கிய நூல்களான “ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்,” “ஸ்ரீ ஸ்துதி, கோதாஸ்துதி” போன்ற புத்தகங்களை வாங்கிப்படித்து பலனடையுங்கள்.
விரைவில்! எமது அடுத்த வெளியீடு!
" ஸ்ரீ காமாட்சி நவாவரண கீர்த்தனைகள்”