- 29-09-2008

நவராத்ரி பெருவிழா இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசையன்று (மஹாளய அமாவாசை) தொடங்கி ஒன்பதாம் நாள் ஸரஸ்வதி பூஜையாகவும் பத்தாம் நாளன்று விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றது . இயற்கையின் மகோன்னதக் காட்சி மலரும் சரத் ருதுவில் நவராத்ரி பூஜையும் வருகிறது. நவராத்ரி என்பது நாம் அம்பாளை அன்பாக அழைத்து, பூஜித்து, துதித்து பாடி பாராயணம் செய்து அவள் விரும்பும் உணவை அவளுக்கு நிவேதனம் செய்து விதவிதமாய் அலங்காரம் செய்து, அவளை மகிழ்வித்து, அவள் அருளை நாடும் நல்லதொரு விழாவாகும். நவராத்ரி ஒன்பது நாள்களிலும் ஒன்பது வகையான அன்னம், ஒன்பது வகையான புஷ்பம்,ஒன்பது வகையான அலங்காரம், என்று எல்லாம் ஒன்பதாக் அமைவதுடன் நாள்தோறும் ஒன்பது சகஸ்ரநாமம் முறைப்படி அப்யுதத் திற்கு நாமார்ச்சனை செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் இரண்டு வயது பெண்குழந்தை முதல் முறையே பத்து வயது குழந்தை வரை ஒவ்வொன்றாகவோ, முதல்நாள் ஒன்று, இரண்டாம் நாள் இரண்டு என்ற முறையாகவோ குமாரி பூஜை அவசியம் செய்யவேண்டும். இந்த பூஜையின் பயனை ஆதிசேஷனாலும் அளவிட்டு கூறமுடியாது என்று நூல்கள் போதிக்கின்றன. நாள் வயது பெயர் பயன் 1 2 குமாரிகா தரித்திர நாசம் 2 3 திரிமூர்த்தி தனதான்ய வளம் 3 4 கல்யாணி பகை ஒழிதல் 4 5 ரோகிணி கல்வி வளர்ச்சி 5 6 காளிகா துன்பம் நீங்குதல் 6 7 சண்டிகா செல்வ வளர்ச்சி 7 8 ஸாம்பவி க்ஷேம் விருத்தி 8 9 துர்க்கா பயம் நீங்குதல் 9 10 ஸுபத்ரா ஸ்ர்வ மங்களம் உண்டாதல் முன் நாட்களில் நவராத்ரி பூஜை - துர்கா பூஜை என்றே வழங்கப்பட்டு வந்தது. இந்த பூஜையில் ஸ்ரீ வித்யா மந்திரங்களும், உபதேச மந்திரங்களும் ஜெபம் செய்யப் பெற்று, உரு ஏற்றப்பெற்று வலுவாககிக் கொண்டார்கள். நவராத்ரியின் முதல் மூன்று நாட்களும் தமோகுண நிறங்கொண்ட துர்காதேவியையும், சதுர்த்தி முதல் மூன்று நாட்களும் ரஜோகுண நிறங்கொண்ட திருமகள் வடிவையும் சப்தமி முதல் மூன்று நாட்கள் சத்வ குணமயமான வெண்ணிற ஸரஸ்வதி வடிவையும் பூஜை செய்கிறோம். நவராத்ரியில் நவாவரண புஜைகள் அமோகமான பலன்களை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அவற்றிற்கு பதிலாக கமலாம்பா நவாவரண கீர்த் கீர்த்தனைகளை கானம் செய்தோ, பராயணம் செய்தோ அதே பலன்களை சுலபமாக பெற்றுவிடலாம் என்று காலம் காலமாக ஒரு நம்பிக்கை இருந்துவருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இவ்வருடம், ஸ்ரீ கமலாம்பா நவாவரண கீர்த்தசஅனைகளின் அற்புத பலன்கள் என்ற நூலை வெளியிட்டுள்ளோம் வாசகர்களின் நெடுநாளைய வேண்டுகோளின்படி எங்களது வெவ்வேறு பிரசுரங்களிலிருந்து நவராத்ரி சம்பந்தமான முக்கிய சுலோகங்களைத் தொகுத்து சிறப்பு நூலாக நவராத்ரிப் பூஜையை வெளியிட்டுள்ளோம். இந்நூலில் முக்கியமாக நவராத்ரி, ஸரஸ்வதி பூஜா விதிகளும், துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதி ஸஹஸ்ரநாமாவளிகளும் தரப்பட்டுள்ளன. இது பூஜைக்குகந்த நூலாக மட்டுமல்லாமல், பரிசளிக்கவும் சிறந்தது.


  - 20-08-2008

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் காலத்திற்கு முன்பே பிறந்தவர் "வேங்கடகவி" என்னும் "ஸ்ரீ வேங்கடசுப்பையர்". ஸ்ரீ க்ருஷ்ண பக்தரான இவர், ஸ்ரீ காமாக்ஷியைப் பற்றியும் நவாவரண கானங்களை அழகிய நடையில் எழுதியுள்ளார் என்பது பலர் அறியாத விவரம். இந்நூலில், ஒன்பது கீர்த்தனங்களுக்கும் எளிய நடையில் பதவுரையும் விளக்கவுரையும் "நவரத்னமாலா எம்.கே.வெங்கடராமன்" அளித்துள்ளார். அம்பாளுக்குப் பிரியமான நாட்களில், குறிப்பாக நவராத்ரியில் இக்க்ருதிகளை பாடினாலோ, ஜபித்தாலோ அம்பாளின் பரிபூரண கடாக்ஷத்தைப் பெறலாம் என்பது திண்ணம். ஸ்ரீ காமாக்ஷியே, திருவாரூரில் இருக்கும் கமலாம்பிகையாகவும், சிதம்பரத்தில் சிவகாமசுந்தரியாகவும், திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாகவும் இருக்கிறாள். நவக்ரஹப்ரீதிக்காகவும் சில மந்த்ரங்கள் நவாவரண பூஜையில் சிலர் உபாசிக்கிறார்கள். அந்த மந்த்ரங்களும், ஆவரணச்சக்ரங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும்....


  - 28-07-2008

ஸ்ரீ அம்பாளுக்கும் , ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஆடி மாதம் அதி விசேஷமான மாதமாகும். ஆடிப்பூரத்தில் அவதரித்தவர் ஸ்ரீ ஆண்டாள். ஸ்ரீ அம்மனின் திருநக்ஷத்திரம் ஆடிப்பூரம் ஆகும்.இந்தியாவில் தென்தமிழகத்தில் ஆடி செவ்வாய் , வெள்ளியில் ஸ்ரீ அம்மன் கோவில்களில் புற்றுக்குப் பால் தெளித்து ஸ்ரீ அம்மனை , இந்துமதப் பெண்மணிகள் வழிபட்டு வணங்குவார்கள். ஆடித்தபஸ் , ஆடித்தீமிதி , ஆடிப்பூசம் , பதினெட்டாம் பெருக்கு ஆகியவை ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ நாட்களாகும். ஆடிவெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்ரம் , ஸ்ரீ ஸெளந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் , ஸ்ரீ அபிராமி அந்தாதிப் பாடல்கள் , ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜை செய்தால் ஸ்த்ரீகளுக்கு ஸகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்


  - 06-05-2008

'க்ஷயம்' என்றால் தேய்ந்து போதல் அல்லது குறைந்து போதல் என்று அர்த்தம். ‘அக்ஷயம்’ என்றால் அழிவின்றி வளர்வது, பூரணமானது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள். சித்திரை மாதம் அமாவாஸையை அடுத்துவரும் மூன்றாம் பிறை நாளான த்ரிதியை தினத்தில்தான்,கிருதயுகத்தை பிரமன் படைத்ததாகச் சொல்லுகிறது பவிஷ்ய புராணம். ஒரு யுகம் முடிந்து மறுயுகம் தொடங்கும் நாளை ‘யுகாதி’ என்பர். அந்த வகையில் அக்ஷ்ய த்ரிதியை தினமும் யுகாதிதான். 'மாலோடு' 'திரு' சேர்ந்து, மஹாவிஷ்ணு 'திருமால்' ஆன தினம் என்பதால், திரிதியை திதி, பொதுவாகவே லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. எனவேதான் அன்று பொன்னும் பொருளும் வாங்கி சேர்த்தால் எந்தவிதக் குறையுமின்றி அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். அட்சய த்ரிதியையன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். மகாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்தபடம் இருப்பின், விளக்கேற்றி பக்தியோடு பூஜை செய்து, தூப, தீபம் காட்டி, காய்ச்சிய பால், பழம் நிவேதனம் செய்து திருமாலை வழிபடுங்கள். இல்லத்தில் செய்யும் பூஜைத்தவிர அன்றையதினத்தில், நாம் வழங்கும் தானத்தால் புண்ணிய பலன்களை வளரச் செய்யலாம் என்கிறது புராணம். அதோடு, அன்றைய தினம் பித்ருக்களுக்காக தர்ப்பணம் அளித்தால் முன்னோர்களின் ஆசியைப் பெற்று, வறுமை நீங்கி வளம் பெறலாம். ஆயினும், பொன்னும் மணியும் வாங்கிக்குவிக்கக் குறியாயிராமல், த்ரிதியை நன்நாளில் நம்மிடம் இருப்பதிலிருந்து சிறிதேனும் வறியோர்க்கு தானமளித்தாலே லக்ஷ்மி நாராயணின் ஆசியையும் அவரது பரிபூரண அருளையும் அட்சயமாய் பெறலாம் என்பதில் ஐயமேதுமில்லை!


  - 01-04-2008

பலரின் வேண்டுகோளுக்கிணங்க மஹாகவி காளிதாஸரின் மகத்தான இதிகாசத்தை இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் “லிப்கோ” ஸ்தாபகர் சர்மாஜி நூற்றாண்டு நினைவுப் பதிப்பாக வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். ரகுவம்ச மஹா காவ்யம் ஸ்ரீ வே.ஸ்ரீ.வேங்கடராகவாச்சார்யர் எழுதிய ஒப்பற்ற நூல்! ஸம்ஸ்க்ருத மூலம், பதவுரை, கருத்துரை, விளக்கவுரை 1216 பக்கங்கள். விலை: ரூ.160


  - 06-02-2008

இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தென்னிந்தியர்களுக்கு, கொண்டாட்டமும் குதூகலமும்தான்.ஆடி மாதப் பிறப்பு முதல் தை மாதப் பிறப்புவரை பண்டிகைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கும் ஆவணியில் கண்ணன் பிறப்பு, புரட்டாசியில் தஸரா, ஐப்பசியில் தீபாவளி கார்த்திகையில் தீபத் திருவிழா, தையில் மகர சங்கராந்தி என மக்கள் புத்தாடை உடுத்தி, பலவித பலகாரங்களூடன் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வர்.பெரும்பாலான பண்டிகைகள், புராண இதிகாஸ நாயக, நாயகிகளை உதாரண புருஷர்களாய்ச் சித்தரித்து, அக்கதைகளைச் சார்ந்தே கொண்டாடப்பட்டு வருகின்றன....


1 2 3