Archive for the ‘Sarmaji Centenary’ Category

Tribute to LIFCO Sarmaji by his contemporaries

The 100th Thirunakshatram of Late Sri Varadachary Krishnaswamy Sarma who so passionately
built and nurtured this great publishing house – LIFCO falls on the 12th of December,
2008. In commemoration of Sri Sarma’s Birth Centenary, we at LIFCO pay tribute to
the visionary, educationist, philanthropist and a personification of Bhakti towards
God, Azhwars and Acharyas, through a visual journey down memory lane as reminisced
by his contemporaries.

 

Visit this alternate web page to view or download the above video.
நினைவலைகள் - மேலேயுள்ள ஒளிப்பதிவில் பேசியவர்கள்:

  • “சங்கர நேத்ராலயா”வின் டைரக்டர், டாக்டர் திரு. பத்ரிநாத்
    1979லேயே பெரிய மனதுடன் தமது கண்களை தானம் செய்த சர்மாஜியைப் பாராட்டுகிறார்
  • சர்மாவின் தோற்றத்தை தமக்கே உரித்தான ஓவியரின் பாணியில் விவரிக்கும் திரு.
    கோபுலு,
    அவரது நற்குணங்களை நம்முடன் பகிர்கிறார்
  • திருமதி.செளந்தரா கைலாசம்: சர்மாஜியின் பெருமையை விளக்கிவிட்டு, வாழையடி
    வாழையாக இந்த ஸ்தாபனம் தழைக்கவேண்டும் என்று வாழ்த்துகிறார்
  • திரு.ஸ்ரீ வேணுகோபாலன்: நிறைய அறிவான புத்தகங்களை பிரசுரித்ததன் வாயிலாக
    நம்மை கண்கலங்க வைத்தவர் சர்மா என்கிறார். லிப்கோ – நூறாண்டு காண வேண்டும் என்று வாழ்த்துகிறார்
  • முன்னாள் துணைவேந்தர், முன்னாள் அரசு செயளாலர், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறைத்
    தலைவர் திரு அவ்வை நடராஜன், “லிப்கோ” – பெயர்வர காரணத்தையும், லிப்கோவின்
    சிறப்பை உணர்த்தும் உன்னத நூலைப்பற்றியும் தனது தெள்ளிய தமிழில் பாங்குற விவரிக்கிறார்
  • பாண்டிச்சேரி ஸ்ரீ.லக்ஷ்மீ ஹயக்ரீவர் கோயில் உருவாவதற்கு முக்கிய காரணகர்த்தா சர்மா
    என்கிறார் பாண்டிச்சேரி அரசாங்க முன்னாள் பிரதம செயலாளர் திரு.ஆர்.எஸ்.சாரி
    அவர்கள்
  • பதிப்பாளர் சங்கத்தலைவரான திரு.விக்ரமன் அவர்கள் லிப்கோ ராமாயணத்தின்
    சிறப்பைப் பற்றியும் சர்மாவுடன் தனது முதல் அறிமுகத்தைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.
    லிப்கோ என்றால் சர்மா தான் என்கிறார் இவர்
  • இசையரசி திருமதி.டி.கே.பட்டம்மாளின் வாழ்த்து
  • சர்மாவிற்காக தாம் எழுதிய ஜோதிட நூலைப் பற்றியும் அவரது ஒழுக்கத்தை பற்றியும் விவரித்து
    ,லிப்கோவை மனதார வாழ்த்துகிறார் ஜோசியர் திரு.திருவள்ளூர் கௌசிகன்
  • பல வருடங்களாய் பதிப்புத் துறையில் இருக்கும் திரு.மூவேந்தர் முத்து சர்மா
    தான் தனக்கு மூவேந்தர் முத்து என்று பட்டமளித்தார் என்கிறார்
  • பல நூல்களை சர்மாவின் வேண்டுகோளுக்காக லிப்கோவிற்கு எழுதியுள்ள ஸ்ரீ.ஸ்தலஸயனத்துறைவார்
    ஸ்வாமி
    , சர்மா கண்டிப்பானவர்; கூரத்தாழ்வானை போல் கண்களை தானம் செய்தவர் என்கிறார்.
  • “ஸ்ரீ ல‌க்ஷ்மீ நாராயண ஹ்ருதயம்” – நூலாசிரியர் திருமதி.விஷ்ணுப்ரியா சாரி
    சர்மா ஒரு அவதாரப் புருஷர் என்று கூறி ஸ்லாகிக்கிறார்…
  • லிப்கோ அகராதிகளின் எழுத்தாளர் குழு தலைவரும் லிப்கோவிற்காகப் பல எழுத்துப் பணிகளில்
    ஈடுபட்டவருமான திரு.வித்வான் மணி, தமது இனிய எண்ணச் சிதரல்களை நமக்கு
    அள்ளித் தெளிக்கிறார்

லிப்கோ ஒளிப்பதிவு குழுவிற்காக தங்களின் நேரத்தை ஒதுக்கிப் பேசிய அனைவருக்கும் எங்கள்
மனமார்ந்த நன்றி.

 

Tribute to LIFCO Sarmaji by his business associates

Following video is part of the series of visual journey down memory lane as reminisced by LIFCO Sarmaji’s contemporaries, business associates, friends & family. In this video his business associates recollect their experiences working with Sri Sarmaji.
  • ஐம்பது ஆண்டுகளாக லிப்கோவுடன் தொடர்பு கொண்டு, லிப்கோ புத்தகங்களை இன்று வரை பைண்டு செய்யும் திரு.ஷண்முகம், ஸ்தாபகரைப் பற்றி கூறும் சில நினைவுகள்
  • சர்மாவின் நோக்கம் அறிந்து, அவரது வலக்கரமாய் செயல்பட்டு, தன் இறுதி மூச்சுவரை, லிப்கோவிற்காகவே உழைத்த அன்புள்ளம் கொண்ட மறைந்த திரு.வேங்கடேச ஐயரின் குடும்பத்தினர் லிப்கோவின் ஸ்தாபகரைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
  • லிப்கோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாய் நேர்மையாய் பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு. கே.என். பார்த்தசாரதி அவர்கள்
  • தனது இளம் வயதில் ஸ்தாபகருடன் பணியாற்றிய நாட்களையும், அவரிடம் தாம் கற்ற பாடங்களையும் திரு.கண்ணதாசன் ஸர்மாவைப்பற்றி கூறியதையும் விவரிக்கும் திருவஹீந்திரபுரம் திரு.கே.என்.வேணுகோபாலன்

Visit this alternate web page to view or download the above video.

 

Tribute to LIFCO Sarmaji by his family

This is the next in the series of visual journey down memory lane as reminisced by LIFCO Sarmaji’s contemporaries, business associates, friends & family. In this video his immediate family talks about Sri Sarmaji.

  • தி.ந.ச.வீரராகவன்: சர்மாஜியின் புதல்வரும்
    லிப்கோவின் தற்போதைய டைரக்டருமான தி.ந.ச.வீரராகவன், சர்மாஜியின் புத்தகங்களை ரசித்துப்
    படிக்கும் திறனைக் கண்டு வியக்கிறார்; பிரமிக்கிறார்
  • தி.ந.ச.வேங்கடேசன்: தந்தையின் “செய்
    உடனே” (Do It Now) என்ற தாரக மந்திரத்தை ஒரு சுவாரசியமான சம்பவத்தின் மூலம் விவரிக்கிறார்.
    அவரது கடைசி மகன் தி.ந.ச.வேங்கடேசன்
  • வஸந்தலக்ஷ்மி: சர்மாவின் மூத்த புதல்வி
    வஸந்தலக்ஷ்மி தகப்பனாரின் ஆரம்பகால நிலைகளை எளிய நடையில் குறிப்பிட்டு, அவரது தயாள குணத்தையும்
    பகிர்ந்து கொள்கிறார்
  • வஞ்சுளா: அன்னையின் எளிமையைப்பற்றியும்
    தந்தையின் கட்டுப்பாடு, நேர்மை, ஒழுக்கம் போன்ற குணாதிசயங்களைப் பற்றியும் அழகாய் விளக்கி
    மகிழ்கிறார். He was a Multi-faceted personality என்று சர்மாவை விவரிக்கிறார் மாப்பிள்ளை
    ஆராவமுதன்
  • வைதேஹி: பக்தியின் எடுத்துக்காட்டு;
    சிக்கனத்தின் சின்னம், பிரம்மாண்டத்தின் ப்ரும்மா; என்று தனது தந்தையைப் பற்றிப் பேசி
    புளகாங்கிதம் அடைகிறார். இவர் கணவர் பார்த்தசாரதியும் தனது மாமனாரைப்
    புகழ்ந்து பூரிக்கிறார். லிப்கோ ஒரு அமுதசுரபி என்று போற்றி மகிழ்கிறார்
  • வேதவல்லி: ‘ஒரு நல்ல கருத்துடன் (Moral)
    தான் ஒவ்வொரு கதையும் முடிவுறவேண்டும்.’ என்று தான் கதையெழுதும்போது தனக்கு அவர் வலியுறுத்திய
    அறிவுரைகளை நினைத்துப் பெருமை கொள்கிறார்
  • ஆர்.வி.ராமானுஜம்: சர்மாஜியின் மைத்துனரான
    இவர் சர்மாவின் எளிமையையும், நிர்வாகத் திறனையும் கண்டு வியக்கிறார். தனது சகோதரி ஜயலக்ஷ்மியின்
    சீரிய பங்கையும் விவரிக்கிறார். சர்மா நற்பண்புகள் நிறைந்த மாமனிதர் என்கிறார்



Visit this alternate web page to view or download the above video.

 

Tribute to LIFCO Sarmaji by his elder sons

LIFCO entering its 81st year in 2009 is an institution built & nurtured by a great visionary, Late Sri.Varadachary Krishnaswamy Sarma. Sri.Sarma, the Founder of Lifco was born on 7th December 2008 (in the Tamil month of Karthigai and star Rohini, same as that of Saint Thiruppanazhvar )in South Arcot District,Tamilnadu. The guiding principles of Sri Sarma was meticulous planning & Punctuality and was a firm believer in “DO IT NOW” policy.

This is the first in the series of visual journey down memory lane as reminisced by LIFCO Sarmaji’s contemporaries, business associates, friends & family.

சாதனைகள்………சிந்தனைகள்………

லிப்கோ ஸ்தாபகரின் மூத்த புதல்வரும் லிப்கோவை 46 ஆண்டுகளாக திறம்பட நடத்திக் கொண்டிருப்பவருமான தி.ந.ச.வரதன் அவர்கள் தகப்பனாரின் சாதனைகளைப் பெருமிதத்துடன் பட்டியலிடுகிறார். சர்மாஜியின் இளைய புதல்வரும் அவரது சட்ட ஆலோசகருமான தி.ந.ச.வராஹன் தந்தையின் தீர்க்க தரிசன குணத்தை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்.

Visit this alternate web page to view or download the above video.