About

லிப்கோ நிறுவனம்

தமிழ்ப் பெருமக்களுக்கு சேவை
ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்கள் 1929-ல் தொடங்கிய ‘லிப்கோ’ என்ற ‘லிட்டில் ப்ளவர் கம்பெனி’ பல அரிய நூல்களை வெளியிட்டுத் தமிழ் நாட்டுக்குச் சேவை செய்துவருகிறது. கீர்த்தனாசார்ய ஸ்ரீ ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸ ஐயங்கார் இயற்றிய, ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்’ இந்நிறுவனத்தின் மகத்தான வெளியீடாகும். இந்நூலின் தமிழ் வசனம் மொத்தம் 1800 பக்கங்களில், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதிலிருந்து ‘ஸுந்தர காண்டம்’ தனியான புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது. வே.ஸ்ரீ.வேங்கடராகவாசாரியர் எழுதிய ‘ரகுவம்ச மஹாகாவ்யம்’, கீழாத்தூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸாச்சாரியர் இயற்றிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’, “108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேச வைபவமும் புராண அபிமான ஸ்தலங்களும்” (தமிழ்), ‘ஸ்ரீமந் நாராயணீயம்’, ஆழ்வார்கள் அருளிச்செய்த ‘நாலாயிர திவ்யப்பிரபந்தம்’ வெளியிட்டுள்ளது. மேலும் ‘ஸ்ரீ தேசிக ஸ்தோத்ர மாலா’, (ஸம்ஸ்க்ருதம், தமிழ் எழுத்துக்களில்) கூடிய பல மிகச் சிறந்த நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
1940 மற்றும் 1950களில் லிப்கோ நிறுவனம் ஆங்கில இலக்கணம் மற்றும் கட்டுரைப் புத்தகங்களுக்கான நோட்ஸ் எனப்படும் கைடு (Guide) புத்தகங்கள் வெளியிடுவதையே தனது பிரதான தொழிலாகக் கொண்டிருந்தது. அடுத்த காலக்கட்டத்தில்தான் ஆன்மீகப் புத்தகங்கள் வெளியிடுவதில் முழுமூச்சாக ஈடுபட்டது எனக் கூறலாம். LIFCO (லிப்கோ) என்னும் வைணவப்புத்தக நிறுவனத்திற்கும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் மடாதிபதிகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே நிறைய தொடர்பு இருந்திருக்கிறது/இருந்தும் வருகிறது…
1949-ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் விழுப்புரத்தின் அருகே ‘வெங்கடாத்ரி அகரம்’ என்னும் கிராமத்திற்கு விஜயம் செய்தபோது, லிப்கோ சர்மா அவரை தரிசிக்க அங்கு சென்றிருந்தார். அப்பொழுது ஸ்ரீ காஞ்சி பெரியவர் சர்மாவிடம் இட்ட ஆக்ஞைப்படி காளிதாஸரின் ‘ரகுவம்ஸம்’ புத்தகமாக வெளிவந்தது. 30-3-1958-ல், பரமாச்சார்யாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் LIFCO நிறுவனத்திற்கு விஜயம் செய்த போது ஆன்மீகப் புத்தகங்களை அதிக அளவில் வெளியிடும்படி ஆக்ஞை பிறப்பித்து ஆசீர்வதித்தார். அவர் கட்டளையைத் தலைமேற்கொண்டு அன்று முதல் இந்த நிறுவனம் ஆன்மீகப் புத்தகங்களைத்தான் அதிக அளவில் வெளியிட்டுக்கொண்டு தமிழகத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.
LIFCO அகராதிகள்
அகராதித் துறையில் என்றுமே லிப்கோ தலைசிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. 1568 பக்கங்கள் கொண்ட ஆங்கிலம் – ஆங்கிலம் – தமிழ் அகராதி வரிசையில் பிரம்மாண்ட (Mega) அகராதி ஒன்றையும், தமிழ் – தமிழ் – ஆங்கிலம் அகராதி, ஆங்கிலம் – ஆங்கிலம் – தெலுங்கு அகராதி, ஹிந்தி – தமிழ் அகராதி ஆகியவற்றையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
LIFCO – வின் தனிச் சிறப்பு
மக்களிடையே நல்ல இயல்புகளையும், அமைதியான வாழ்க்கை முறைக்கேற்ற மனப்பக்குவத்தையும் உருவாக்கி வளர்க்கக்கூடிய ஏராளமான நூல்களைக் குறைந்த விலையில் லிப்கோ வெளியிட்டு வருகிறது என்பதே பொதுமக்களின் ஏகோபித்த கருத்து. லிப்கோவைப் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. ‘TAMBRAS’ (Tamil Nadu Brahmins Association) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ”அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்” என்ற வெளியீட்டில், பதிப்பகத் துறையில் தலைசிறந்த மூவருள் ‘லிப்கோ ஸ்ரீ சர்மா’ வையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்து புகழ்மாலை சூட்டி, புத்தகத்துறையில் ஸ்ரீ சர்மாவின் சாதனைகளைப் பற்றி விவரமாகப் பட்டியலிட்டு சிறப்பாக எழுதியுள்ளது.
‘பொன்விழா பற்றி’
7-12-1979 அன்று லிப்கோவின் ‘பொன் விழா வைபவம்’ அன்றைய தமிழக ஆளுநர் ஸ்ரீ பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் தொடங்கி வைக்க மிக விமரிசையாக நடந்தது.
LIFCO இன்று
நிறுவனர் அமரர் ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா. ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா அவர்களின், பேரன் திரு.டி.என்.ஸி.விஜயசாரதி லிப்கோ நிறுவனத்தின் சேர்மேனாகவும் அவரது மனைவி திருமதி. ராதாவிஜயசாரதி மேற்பார்வையில் லிப்கோ நிறுவனம் மேற்கு சி.ஐ.டி நகர், சென்னையில் (போன்: 044 – 24336467 & 24341538) கட்டுகோப்பாக இயங்கிவருகிறது.
பெருமைக்குரிய மதிப்புரைகள்
வடமொழிப் புலமைக்காக ஜனாதிபதி விருது பெற்ற ஒப்பிலியப்பன் ஸந்நிதி, ஸ்ரீ உ.வே.வங்கீபுரம் நவநீதம் ஸ்ரீ ராமதேசிகாசார்ய ஸ்வாமி, லிப்கோவைப்பற்றி வழங்கியுள்ள ஆசியுரையிலிருந்து:
“நாட்டுக்கு நலம் புரிவதையே குறிக்கோளாகக் கொண்டு நெடுங்காலமாகப் பற்பல தொண்டுகளைப் பல்வேறு வழிகளில் ஆற்றிவரும் சென்னை லிப்கோ ஸ்தாபனத்தை அறியாதார் இலர். இந்த ஸ்தாபனம் சென்னையில் இருந்துகொண்டு தமிழ் நாடு முழுவதும், வட நாட்டிலும், கடல் கடந்தும் கூட அறிவுச் சுடரை ஏற்றிப் பல நன்மைகளை விளைவித்துவருகின்றது. சிறுவர் தொடங்கி முதியவர் வரை அனைவருக்கும் நல்வழி காட்டும் புத்தக நிறுவனம் இது ஒன்றே என்றால் மிகையாகாது”.
வைரமுத்து (தமிழ் கவிஞர்) -பள்ளிநாட்களில் லிப்கோ அகராதியோடு வாழ்ந்தவன் நான். தமிழ்நாட்டுக் கல்வி வரலாற்றில் அழிக்க முடியாத திருப்பெயர் லிப்கோ. அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
Sri. R. Rajendran, Administrative Officer, Cuddalore. National Institute of Port Management. – பல வருடங்களாக லிப்கோ புத்தகங்களை வாங்கி, விரும்பி படித்து, பாதுகாக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
திரு. எம்.எஸ்.உதயமூர்த்தி, சென்னை-41 – மிக நல்ல நூல்கள்-குறிப்பாக ஆன்மீக நூல்களை எல்லோரும் வாங்கக்கூடிய மலிவு விலையில் வழங்கி வருவதைக் கண்ணுற்ற போது நல்லவர்களை மனமாரப் பாராட்டவேண்டும் என்ற எண்ணம்தான் எழுந்தது.
தினமணி. [Tamil News Daily] – லிப்கோவின் வெற்றிக்கு அகராதிப் பதிப்பில் உள்ள பிற்சேர்க்கையும் முக்கியக் காரணமென்றும், மேலும் தமிழ்-ஆங்கில அகராதி, ஆங்கில-தமிழ் அகராதி ஆகிய இரண்டுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றும் கூறுகிறார், மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள்.
OUR MODEST AMBITION
With divine Grace and the blessings of Elders, it is our great desire that our Books should be BIG in every way – Books that are vivid and enduring, Books that pulsate with great and good ideas-books with messages that will touch the reader’s heartstring’s, and books that will elevate one’s thoughts to sublime regions. It is our modest ambition, to reach the innermost recesses of the readers’ hearts through our books, so that the readers there of might strive for and reach the highest levels of attainment.
To put it in a nutshell we yearn through our books to do real and lasting service to Man, Country and God!
THE LITTLE FLOWER CO.
(LIFCO)
Publisher
Unmindful of material considerations, and even involving material losses sometimes, has been distributing throughout India free booklets of immense moral and spiritual value on auspicious and festive occasions, every year, to the students and Asthika public.
A monumental publication that came out of ‘LIFCO’ through the untiring efforts of Sri Sarma is SRIMAD RAMAYANA OF VALMIKI Translated into Tamil by the late KEERTHANACHARYA SRI C. R. SRINIVASA AYYANGAR. This excellent and voluminous publication in Tamil has brought into each home the spiritual fragrance of sage Valmiki’s immortal work in samskrit viz., the Ramayana.
Other publications which earned wide appreciations are the Tamil Translation of Kalidasa’s Raghuvamsa, by a great samskrit Scholar, Sahitivallabha Sri V.S. Venketa Raghavachariar, Namakkal Kavignar (ex-Poet Laureate) V.Ramalingam Pilllai’s Poems, “Education in practice” by Kulapathi Sri Balakrishna Joshi, “In quest of Health” by the world-famous Surgeon Mr. George Sava, etc.
“RISHIGALUM GOTHRANGALUM” a LIFCO publication of great value in Tamil is the result of Sri Sarma’s earnestness in this direction.
Our humble and sincere tribute to our MASTER, with devout prayers to GOD that LIFCO grow from strength to strength, as each year rolls on in its endless and ceaseless journey on the path of religion and Wisdom!
About Founder:
SRI VARADACHARY KRISHNASWAMY SARMA, the founder of The Little Flower Co. (LIFCO) was born on the 7th day of December, 1908
Sri Sarma’s hails from the same family, “THIRUMALAI NALLAN CHAKRAVARTI” from which the late, revered RAJAJI hailed- A Vadakalai Sri Vaishnavite. He imbibed from his own elders and teachers Godliness and Ahimsa, right from his fifth year. He was never discouraged as his FAITH IN GOD was firm.
Even as a young student of St. Joseph’s High School, Cuddalore, South Arcot District, Sri Sarma came under the benign influence of foreign Missionaries, especially, the Rev. Father Verdure. Though a Hindu Vaishnavite, Sri Sarma had a Catholicity of outlook in that he also followed the lofty ideals of the Christian Missionaries. He is a staunch devotee of the Saintly Sankaraachaaryas of Sri Kaanchi Kaamakoti Peetam.
Sri Sarma who was brought up by very good, elders was made to believe in the virtues of Patience, Promptitude, Punctuality, and Godliness etc.
The name : THE LITTLE FLOWER COMPANY , a publishing Concern, founded by Sri Sarma in the year 1929, was inspired by the benedictions and guidance of that Foreign Missionary –“ LITTLE FLOWER “ –Representing ST. THERESA. Rev. Father Verdure took a pledge from Sri Sarma that he should bring to bear a spirit of service on all his dealings with the people through his publications.
‘LIFCO’, the shortened name of his publishing concern had become popular in all Indian homes and even abroad and innumerable books of educative, religious, cultural and informative value disseminating noble ideals of tolerance, cordiality, universal peace and good conduct have come out of Sri Sarma’s publishing house.
His clock had 13 hours and his calendar 32 days a month! His motto has always been, “Do it now”. If so much success has come to LIFCO, and it is entirely due to his skill in meticulous planning and careful execution. Above all, his great sense of time is beyond description.
Sri Sarma introduced some novel schemes to enable even poor and middle-class people to possess this valuable publication.
Some of the eminent sons of India and intellectuals like Kulapathi V. V. Srinivasa Aiyangar, Dr. Sir C. P. Ramaswami Aiyar and Sri Khasa Subba Rao, have acclaimed at cultural gatherings that Sri Sarma is an institution by himself.
Sri Sarma has many ‘Firsts’ to his credit!
 • He was the first to found a publishers and Booksellers Association of India in about 1931.
 • The first to publish an excellent book concerning Physical Education – Physical Education for Boys in Indian Schools by Dr.G.F. Andrews.
 • The First to prepare and print an excellent catalogue of hundreds of publications of the madras university publications of the Madras University When LIFCO was appointed Sole Aents for selling the Madras University Publications:
 • The first to publish Sales tax manuals both in English and Tamil.
 • The first to bring out very cheap books in English for one anna and in Tamil for four annas (equivalent to twenty five paise).
 • The first to put on roads mobile vans to carry books to remotest villages of Tamil Nadu.
 • The first to publish excellent instructors in Tamil Shorthand and Tamil Typewriting.
 • The first to publish a book in Tamil regarding the care and maintenance of a bicycle
 • The first to publish an excellent guide to Posts and Telegraphs:
 • The first to publish an excellent treatise in regard to police and the public in Tamil;
 • The first among the publishers of books to advertise ONE FULL PAGE in The Hindu Daily, twice.
In about 1930. Sri Sarma formed the FIRST Audit Student’s Association in the Government Institute of Commerce which was then functioning in the Madras Law College buildings, and he was its first Founder-secretary. Sri Sarma donated the net proceeds to the Madras Sevasadan in whose progress Lady Venkatasubba Rao was taking keen interest.
Our founder is not only a publisher but a versatile writer also. Even when he was young, he had written and published a sacred book entitled “POOJA BHAAGAVATHAM”, besides some other novels in Tamil.
Sri Sarma is also a Chartered Accountant. During the world War II, in 1943-44, he was appointed as a Deputy Assistant Controller of Military Accounts and was posted as the Local Audit Officer and Financial Adviser to the big Ordnance Depot at Secunderabad. He was regarded as one of ‘the most Brilliant Audit Officers in the Southern Army’.
Sri Sarma who was Practising as a Chartered Accountant till 1954, was entrusted with the auditing of accounts of several temples and also minor and trust properties.
He is the Honorary adviser to the Desika Darsana Sabha, Taramani, Madras 600042 and to the tiruppani committee of Lord Sri Ranganatha Swami Devastanam, Tiruvarangam, Kallakurichi Taluk, South Arcot district, and he has been unanimously adopted by the members of the united Vaishnavitiessabha, Madurai, as their life-patron.
The founder earned the goodwill for THE LITTLE FLOWER CO. (LIFCO) by honest methods and expert stewardship. This firm was one of the selling agents for the Madras Government Publications. As already stated above, it was the sole Agent for selling the publications of the Madras University.
Sri Sarma secured for LIFCO and tamil translation tights of Erle Sanley Garder’s novels. Our Founder fulfilled a great desideratum by republishing, in the Year 1968, a rare spiritual book “VADAKALAI GURU PARAMPARAA PRABHAAVAM”. This book which was earlier published by Sriparakala mutt. Mysore in about 1913 had been out of print till then.
His Holiness, Sri Kanchi Kamakoti Parama-acharyal sanctified LIFCO with the Holy Dust of HIS LOTUS FEET on 30-3-1958 when HE blessed and commanded that LIFCO should do more and more service to our Religion through its books. It is the firm and earnest belief of Sri Sarma that the successful accomplishment of the here culean task of bringing out the Tamil translation of SRIMAD RAMAYANA OF VALMIKI by the Late KEERTHANACHAARYA Sri C.R. SRINIVASA AYYANGAR was entirely due to the divine blessings of this Acharyas.
In the field of philanthropy, Sri Sarma has taken up in all humility the noble cause of donating Sri Sathaaris made in copper, to various temples throught out India and as on 31-1-2017. 2291 Sri sathaaris have been donated. Public conferred on him the title of “SRI SATHAARI SEVAKA” in 1968, on the occasion of his Sixty-first Birthday.
Sri Sarma’s complete identification with LORD SRI LAKSHMI HAYAGREEVA defies description. He was the main force behind the construction of temples for LORD SRI HAYAGREEVA in Nanganallur
Inspired by LIFCO’s publications, singing the glory of this Lord, Sri Sourashtra Sabha, Madurai, constructed-thanks to the munificence of Dharma bhushnam Sri P.N.S.K. Seetharama Aiyar, a local business magnate of repute -a charming and holy sannidhi for this Lord and also a shining and sacred Sannidhi for Swami Sri Desika in their Sri Prasanna Venkatesa Perumal Temple. Due to his untiring efforts, a housing colony in Velacheri was named as “Sri Lakshmi Hayagreeva Nagar” and his Holiness, the jeer of Sriparakala mutt of Mysore, whose presiding deity is LORD SRI LAKSHMI HAYAGREEVA, was also pleased to inaugurate this colony on 9-4-73.
LORD SRI LAKSHMI HAYAGREEVA, the same jeer of Sriparakala mutt, mysore, was pleased to confer the richly deserved title of.’ HAYAGREEVA SEVA RATHNAM” on Sri Sarma on 25-6-1977.
Sri Sarma is in the constant habit of giving the following important advice that he himself has always been practising , to youngsters: ‘: In all human events, in all human activites there must be a METHOD, PURPOSE and AN OVER – ALL PLAN THAT WILL WORK. Expecially every businessman must use his brain to find the KEY to this PLAN so that he will be sucessful.”
The enthusiasm and earnestness of our founder for spreading literacy in our land, noted for its culture and knowledge, are as remarkable as they are almost indescribable.
The LIFCO have realised in no small measure that his advice and gudance are invaluable in enabling LIFCO to make further strides along the path laid down by their beloved founder.
Here are certain laudable habits and practices of our learned Founder which are worthy of emulation by all those who desire to progress in life.
 • Small saving
 • Planning
 • Insurance
 • Allotment of work
 • Respect for Great souls
 • Greetings
 • Human welfare
 • Thoroughness
 • Business
 • Right Recognition
 • Moral Foundations
As publishers of religious and ethical books, we are duty-bound to call our dear youngsters, to note that all of us must follow only in the footsteps of our ancestors-the depositors of the collected wisdom and culture of our great nation. We must NOT hate disrespect or speak ill of other Sects of Religions, even in the slightest manner and even the wildest of our dreams.
“Jnanandamayam devam nirmala sphatikakrtim adharam sarvavidyanam hayagrivamupasmahe”
“OM SRI HARI”